டெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

390

டெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி மூத்த தலைவர் குமார் விஸ்வாசுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. குமார் விஸ்வாசுக்கு ஆதரவாக
பத்துக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குமார் விஸ்வாசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக ராஜேந்திரபால் கவுதம், கைலாஷ் கெலாட் ஆகியோர்
அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி தலைவர்களின் ஊழல் பட்டியலை இன்று வெளியிட உள்ளதாக கூறியுள்ளார். அதேநேரம், டெல்லியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரிவர தீர்க்க தவறியதற்காக கபில் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.