டெல்லியில் குடிநீர் லாரிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மீது ஊழல் ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

214

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் முதலமைச்சராக இருந்த போது குடிநீர் விநியோகிப்பதற்காக 385 லாரிகள் வாங்கப்பட்டன. இதில் 400 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து. டெல்லி அரசால் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின்படி, கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை எனக்கூறி, ஊழல் ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை ஆளுனர் நஜீப் ஜங் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, தற்போது ஊழல் தடுப்புத்துறை முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அனைத்து விசாரணை அமைப்புகளையும் தன் அதிகாரத்தின்கீழ் பிரதமர் மோடி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் கெஜ்ரிவால், சிபிஐ விசாரணைக்கு கூட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.