டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து ..

620

டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோன்று, விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும், தெருக்களிலும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது