உத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..!

150

நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழை, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகளவில் காணப்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள், பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஆக்ரா, டெல்லி புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. கோடை வெப்பம் உருக்கிய நிலையில், இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.