டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

354

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்க்கும் கனமழை ஒரு புறம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நேற்று இரவு இடைவிடாது நான்கு மணி நேரம் பெய்த கனமழையால் குர்கான் பகுதியில் உள்ள பத்சாபூர் கழிவு நீரோடை நிரம்பி வழிந்தது. இதில் இருந்து வெளியேறிய கழிவு நீர் டெல்லி – குர்கான் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று இரவு முதல் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையாக நின்றதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இன்று காலை வரை நீடித்த இந்த போக்குவரத்து நெரிசலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரை குர்கானுக்கு வாகனத்தில் வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.