டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.

197

டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த பல நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோன்று, விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் குறைந்தபட்ச தட்ப நிலை 3 டிகிரி செல்ஷியசாக பதிவாகியுள்ளது. மோசமான பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளிலும், தெருக்களிலும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கடுமையான குளிரை சமாளிக்க நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். இதனால் வட மாநிலங்களில் இயல்வு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.