டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் பனிப்பொழிவு வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

227

டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த பத்து வாரங்களுக்கும் மேலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. உறைய வைக்கும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் முழுமையாக தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் தடைபட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் டெல்லியிலிருந்து புறப்படும் 19 ரயில்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே கூறியுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.