ரியோ ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த டெல்லியில் சிறப்பு மாரத்தான். பிரதமர் மோடி தொடங்கிவைத்த போட்டியில் பல்லாயிரம்பேர் பங்கேற்பு.

307

டெல்லியில் 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற ரியோ மாரத்தான் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

2016-ம் ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜனேரோவில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தயா சார்பில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் விதமாக பிரம்மாண்டமான மாரத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லி மேஜர் தயான் சந்த் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். லட்சக்கணக்கான இந்திய மக்களின் கனவை நினைவாக்க வீரர்கள் களமிறங்குகின்றனர் என்றும், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2020-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் பங்கேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.