டெல்லியில் தொடர்ந்து பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு..!

352

டெல்லியில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தலைநகர் டெல்லியில் அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மோடி பாக், ஆர்.கே புரம் மற்றும் லக்ஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளின் சாலைகள் நீரில் மூழ்கின. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் லஜ்பத் நகர் சந்தை, பன்ட் நகர், உள்ளிட்ட சாலைகளின் போக்குவரத்தும் தடைப்பட்டது. டெல்லி போக்குவரத்து போலீசார் டுவிட்டர் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே, ஹனுமான் மன்டிர் அருகே உள்ள யமுனா பஜாரில் மழை நீரில் பயணிகளுடன் சென்ற பேருந்து சிக்கிக் கொண்டது. தகவலறிந்து சென்ற மீட்பு படையினர் பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.