எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி..!

223

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எரிபொருள் விலை உயர்வை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து, இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, டெல்லியில் ராஜ்காட் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள், மததிய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடி, ராம்லீலா மைதானத்தை சென்றடைந்தது. கைலாஷ் யாத்திரையை அவசரமாக முடித்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை எதிர்த்து நடைபெற்ற இந்த பேரணியில் கலந்துக்கொண்டார். இந்த பேரணியில் எரிபொருள் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவர் சரத்யாதவ், திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.