ஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது..!

359

ஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது.தலைநகர் டில்லியில், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகின்றன.இது போன்ற சம்பவங்களை தடுப்பது, காப்பாற்றுவது, சொந்த ஊர்களுக்கு அவர்களை திருப்பி அனுப்புவது, அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தந்து, பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த, ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, ஆம் ஆத்மி அரசு கொள்கை வரைவு ஒன்றையும் தயார் செய்துள்ளது.இதில், பெண்கள்,குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், கடத்தல் தடுப்பு பிரிவுடன், புதிகாக ஒரு குழு அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடத்தல்களை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என, இதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கப்படுவதை தடுக்கவும்,
அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும், இரவு நேர நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் என ஆம் ஆத்மி அரசு கூறியுள்ளது.