மும்பை, ஐதராபாத் நகர்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

354

மும்பை, ஐதராபாத் நகர்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயின் பயணிகள் ரயில்கள் தாமதமாக செல்கின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து மழையால், ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனிடையே. ஐதராபாத்திலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இதனால், நகரின் குடியிருப்பு பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், 12 மணி நேரத்திற்கு மேல் பெய்த அதிகப்படியான மழை இது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு முழுக்க பெய்த மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழையினால் பாதிக்கப்பட்ட ஐதராபாத் நகரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.