டெல்லி விமான நிலையத்தில், துபாய்க்கு கடந்த இருந்த 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

337

டெல்லி விமான நிலையத்தில், துபாய்க்கு கடந்த இருந்த 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக சென்ற பயணிடம், சோதனையிட்டபோது அவருடைய பையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தது கட்டுப்பிடிக்கப்பட்டது. கடத்த முயன்ற 1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் டெல்லியை சேர்ந்தவர் என்பதும், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 6 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்தது தெரியவந்தது. இவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.