தலித்தை திருமணம் செய்பவர்களுக்கு ரூ.2.5 லட்சம் உதவித்தொகை பெறுவதை எளிமையாக்கியது மத்திய அரசு..!

321

தலித்தை திருமணம் செய்பவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கலப்பு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தலித்தை திருமணம் செய்பவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த திட்டத்தில் இதுவரை 116 தம்பதிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளனர். இதையடுத்து, இந்த திட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்யும் வகையில் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு, திட்டத்தில் உள்ள சிக்கல்களை போக்கும் வகையில் விதிகளை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, தலித்தை திருமணம் செய்பவர்கள் சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் உதவித்தொகையை பெற்று கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த உதவித்தொகையை பெறுவதற்கு இனிமேல் வருமான உச்சவரம்பு தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.