டெல்லியில் நாளை லோக்பால் குழு கூட்டம் : பிரதமர் மோடி, தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்பு

485

டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் லோக்பால் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

ஊழலை ஒழிக்க மத்தியிலும், மாநிலத்திலும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற போராட்டம் நெடுங்காலமாக நடைபெற்று வந்தது. இதன் அடிப்படையில் மாநிலத்தில் லோக் ஆயுக்தாவும், மத்தியில் லோக்பாலும் நிறைவேற்றப்பட்டது. இதில் லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2014ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழு தொடர்பாக இதுவரை தெளிவு ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் லோக்பால் குழுவை அமைத்திட வேண்டும் என பிரதமர் மோடி முனைப்பு காட்டி வருகிறார்.

லோக்பால் குழுவின் 4 வது கூட்டம் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி தலைமையில் லோக்பால் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நீதிபதி முகுல்ரோதகி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். லோக்பால் தொடர்பான இழுபறி எப்போதுமுடிவுக்கு வரும் என்பது புதிராகவே உள்ளது.