வீடு தேடி வரும் மாநில அரசின் 100 சேவைகள் : முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

271

வீட்டில் இருந்தபடியே, 50 ரூபாய் கட்டணத்தில் அரசு சேவைகளை பெறும் வசதிக்கு, டெல்லி ஆம்ஆத்மி அரசு அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மக்கள் மனம் கவரும் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்து வருகிறார், இந்த நிலையில், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட, 100 சேவைகளை, அலுவலகம் அல்லது வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளார். முதலமைச்சர் தலைமையில் நடைபெறற அமைச்சரவைக் கூட்டத்தில், நிர்வாக சீர்திருத்த துறையின் கீழ், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான சேவைக் கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.