டெல்லியில் இளைஞர் ஒருவர் ஆசிரியையை 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

281

டெல்லியில் இளைஞர் ஒருவர் ஆசிரியையை 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் புராரி பகுதியை சேர்ந்த 21 வயதான கருணா ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களாக சுரேந்தர் என்பவர் இவரை ஒரு தலையாக காதலித்தாக தெரிகிறது. தொடர்ந்து சுரேந்தர் தொல்லை கொடுத்ததால், காவல்நிலையத்தில் கருணாவின் சகோதரர் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சுரேந்தர், திடீரென்று ஆசிரியை கருணாவை இன்று சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். 22 இடங்களில் கத்தி குத்துக்களுடன் சாய்ந்த கருணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றிஅவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய சுரேந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.