தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரத் யாதவ் வழக்கு!

385

தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் திடீர் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தார். இதற்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் உள்ளிட்டோர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி தூக்கினர். இதனையடுத்து அவர்கள் இருவரும் வகித்து வந்த மக்களவை உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என துணை ஜனாதிபதிக்கு ஐக்கிய ஜனதாதளம் கடிதம் எழுதியது. இதனால் சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சரத் யாதவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் பீகார் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.