இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடுவது டெல்லி அரசுக்கு வெட்கமானது- மம்தா பானர்ஜி!

434

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடுவது டெல்லி அரசுக்கு வெட்கமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டெல்லியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர். இதனால் மாஸ்க் அணிந்து விளையாடுகின்றனர். இந்நிலையில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடுவது வெட்கமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது நாட்டிற்கு நற்பெயரை வாங்கி கொடுக்காது என சுட்டிக் காட்டிய அவர், மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.