டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

1101

டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வெண் படலம் போன்று பனிமூட்டம் காட்சியளிப்பதால் குறைந்த தூரம் மட்டுமே கண்ணுக்கு புலப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியேசாலைகளில் செல்கின்றன. மோசமான வானிலை காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 20 ரயில்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.