வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..!

224

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. உறைய வைக்கும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் முழுமையாக தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக விமான சேவைநேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் டெல்லியிலிருந்து புறப்படும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 150 விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ரயில் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.