உத்தரக்காண்ட், டெல்லியில் லேசான நில அதிர்வு | கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி..!

307

உத்தரக்காண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று இரவு 9 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஹரித்துவார், அல்மோரா, ராம்நகர் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் ஐந்து புள்ளி ஐந்தாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உத்தராஞ்சல் மாநிலத்திலும் உணரப்பட்டதாக அம்மாநில மக்கள் தெரிவித்தனர்.