ஒகி புயல் பாதிப்புக்கு இழப்பீடு கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி செல்கிறார்..!

725

ஒகி புயல் பாதிப்புக்கு இழப்பீடு கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி செல்கிறார்.
ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு புயல் சேதம் குறித்த அறிக்கையை ராஜ்நாத்திடம் அளித்து நிதியுதவி கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, ஓகி புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே, பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.