கழிவுநீர் அகற்றுவோருக்கு இலவச உபகரணங்கள் – டெல்லி முதலமைச்சர் கெஜிரிவால் அறிவிப்பு

131

டெல்லியில் அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார்.

கழிவுநீர்த் தொட்டிகளில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் நேற்று அரசு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால், கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தனியார் மற்றும் அரசு துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார். இனிமேல் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் யாரும் துப்புரவுப்பணியில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.