டெல்லியில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு காப்பற்றும் நபருக்கு பரிசு வழங்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

277

டெல்லியில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு காப்பற்றும் நபருக்கு பரிசு வழங்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மேட்டிபுல் பகுதியில் 35 வயதுடைய வாட்சுமேன் ஒருவர் சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அடிப்பட்டு ரத்தப்போக்குடன் சாலையில் கிடந்த அவரை, அவ்வழியாக சென்ற யாரும் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் விபத்தில் அடிபட்டவரின் செல்போனை மட்டும் சைக்கிள் ரிக்ஷவில் வந்த ஒருவன் திருடி சென்றுள்ளான். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு காப்பற்றும் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஊக்க திட்டம் தயாராக உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் ஆளுனரின் ஒப்புதல் பெற்று அமலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக விபத்தில் சிக்கியவர்களை, காப்பாற்றும் நபர்கள் போலீஸ் விசாரணைக்கு பயந்தே கண்டும் காணாமல் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.