டெல்லியில் துணை நிலை ஆளுனருக்கே அதிகாரம் உள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஆம்ஆத்மி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

226

டெல்லியில் அதிகாரபகிர்வு தொடர்பாக, கவர்னருக்கு எதிராக ஆளும் ஆம்ஆத்மி அரசு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டெல்லியில் துணைநிலை ஆளுனருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் டெல்லி அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அதிகார பகிர்வு தொடர்பாக டெல்லி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும், இது அவசர வழக்காக விசாரிக்கப்படும் எனவும் அறிவித்தது. மேலும், இவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.