நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் | மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க திட்டம்

106

டெல்லியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. 16-வது மக்களவையின் இறுதி பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் உரையாற்றுகின்றனர். அப்போது, வரும் மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் வியூகங்கள் குறித்து விவகாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.