சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

284

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு சென்னை சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை சாஸ்திரிபவன் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாஸ்திரி பவனைமுற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதனால், மாணவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், போலீசாரின் தடுப்புகளை மீறி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.