டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

285

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி சட்டசபை உறுப்பினர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதனால், மோடிக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் பட்டேல் பதவி விலகலுக்கு ஆம் ஆத்மி கட்சியே காரணம் என கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அரசியல் கட்சியினர் அறிவித்து இருந்தனர். மேலும் டெல்லியில் விழாக்கள் குறித்த அறிவிப்புக்களாலும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.