ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததில் அதிரடி திருப்பம்..!

397

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததில் அதிரடி திருப்பமாக, அவர்கள் அனைவரும் ஆண்மீக காரணங்களுக்காக தற்கொலை செய்திக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் நேற்று அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த வீட்டில் கடிதங்களை கண்டெடுத்துள்ளனர். ஒரு கடிதத்தில், மனித உடல் தற்காலிகமானது என்றும், கண்களையும், வாயையும் மூடிக்கொள்வதன் மூலம் பயத்தைக் கடந்துவிடலாம் எனவும், இந்த சடங்குகளைப் பின்பற்றினால் பிரச்சனைகள் தீர்ந்து, ரட்சிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றை ஆய்வு செய்த போலீசார், ஆன்மிகம் சார்ந்த மூட நம்பிக்கையின் காரணமாக இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.