உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடும் நிலச் சரிவு | 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பு

237

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடும் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ஹதி பர்வட் என்ற பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில், சுமார் 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் பத்ரிநாத்துக்கு யாத்திரை சென்றவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவால் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏறக்குறைய 60 மீட்டர் அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நிலச் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் 150-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.