தீரன் சின்னமலையின் 213-வது நினைவு தினம்..!

152

மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 213-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிலைக்கடத்தல் வழக்கு சி.பி.ஐ. மாற்றப்பட்டது வெளிப்படையான விசாரணைக்காகத்தான் என விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் நிர்வாகிகள் தீரன் சின்னலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று, கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.