தீபிகா படுகோனே ஓவியம் அழிப்பு ஓவியர் மீது வன்முறையாளர்கள் தாக்குதல்!

241

தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாக இருக்கும் பத்மாவதி திரைப்பட ஓவியத்தை வரைந்தவர் மீது குஜராத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் கரண் என்ற ஓவியர், பத்மாவதி திரைப்பட ஓவியத்தை ரங்கோலி கோலத்தில் வரைந்திருந்தார். அப்போது அங்கு வந்த வன்முறையாளர்கள் அந்த ரங்கோலி ஓவியத்தை சிதைத்ததுடன் அதனை வரைந்த ஓவியரையும் கடுமையாக தாக்கினர். இந்த நிலையில் இதற்கு தீபிகா படுகோனே ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கலைப்படைப்பின் சுதந்திரத்தின் மீது தலையிட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை நாள்களுக்கு இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை பொறுத்துக்கொள்வது என்று கூறிய தீபிகா, வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுகொண்டுள்ளார்.