தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு பேருந்துகள்சென்னையில் 5 இடங்களிலிருந்து இயக்கப்படுகின்றன-போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

283

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 5 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கான சிறப்பு கவுண்டர்களை தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 18 -ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து செல்வர். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், செனனையில் இருந்து 5 இடங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 29 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. . இதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிறப்பு கவுண்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.