ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் : ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.

333

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இவரிடம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை எழிலகத்திற்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், நீதிபதி ஆறுமுகசாமியிடம் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை திருப்தி அளிப்பதாக கூறினார். மேலும் தீபா கூறியது போல் சசிகலா உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீபக் வலியுறுத்தியுள்ளார்.