ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன். : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

149

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக, அவரது அண்ணன் மகள் தீபா மீண்டும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவை முதலமைச்சராக ஏற்க முடியாது என்று கூறினார். சசிகலா முதல்வராக தேர்வானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என்று விமர்சித்த தீபா, தமக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் ஆலோசனையும் அளித்து வருவதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தீபா கூறினார்.