ஜெ. தீபா பேரவை கூட்டம், 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் !

133

தமிழக மக்களை காக்க தீபாவால் மட்டுமே முடியும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கரூரில் மாவட்ட அளவிலான தீபா பேரவை கூட்டம் நடைபெற்றது. தீபா பேரவை ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபாவின் வழியில் கோடிக்கணக்கான தொண்டர்களை இணைத்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.