உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடபோவதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.

368

உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடபோவதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அரியலுரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் குடும்பத்தை தனது கணவர் மாதவனுடன் நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். நீட் தேர்வினால் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பிரதமர் மோடியின் எண்ணப்படி தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தனித்து களமிறங்கும் என்று தெரிவித்தார்.