தீபா வீட்டில் புகுந்த நபர் தீபா கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!

654

ஜெ. தீபா வீட்டில் புகுந்து தப்பியோடிய போலி வருமானவரித்துறை அதிகாரி சென்னை காவல்நிலையத்தில் சரண்அடைந்தார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை தியாகராயநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் ஜெ.தீபா வீட்டுக்கு வந்துள்ளார். தீபா வீட்டை சோதனை நடத்துவதற்காக வந்திருப்பதாக அங்கியிருந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடத்துவதற்காக பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தீபா வீட்டுக்கு சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபர் காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். போலி வருமான வரித்துறை அதிகாரியை பிடிக்க சென்னை முழுவதும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெ. தீபா வீட்டில் புகுந்த அந்த நபர் மாம்பலம் காவல்நிலையத்தில் சரண்அடைந்தார். அப்போது, தீபாவின் கணவர் மாதவன்தான் தம்மை போலி வருமானவரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தன்னை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி மாதவன் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.