எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு செயலாளராக தான் இருப்பேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

364

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு செயலாளராக தான் இருப்பேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தன்னிடம் வந்துள்ளதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு செயலாளராக தான் பொறுப்பேற்று இருப்பதாகவும், தங்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று தீபா குறிப்பிட்டார். குறுகிய காலத்தில் எனது அரசியல் பயணத்தை துவக்கி இருப்பதாக கூறி அவர், தான் அரசியலில் இருக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடையூறுகள், தடைகள் ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும், தன்னுடைய கட்சி எந்த ஒரு சூழ்நிலையிலும் குடும்ப அமைப்பாக செயல்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார். கட்சியின் கொள்கைகள் நாளை அறிவிக்கப்படும் என்று கூறிய தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு உரிய அறிக்கைகளை தான் மட்டுமே வெளியிடுவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார்.