நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு..!

214

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டியுள்ளார். இந்த கூட்டத் தொடரில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, பல்வேறு கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் நாடாளுமன்ற அலுவலகத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தினர். மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.