டிசம்பர் 10 ஆம் தேதிக்கு பிறகு ரெயில் மற்றும் பேருந்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

367

டிசம்பர் 10 ஆம் தேதிக்கு பிறகு ரெயில் மற்றும் பேருந்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30 ஆம் தேதிவரை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக, நாட்டில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த நிலையில், பழைய 500 ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். பின்னர், பழைய நோட்டுக்களை டிசம்பர் 15-ந் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு ரெயில், பேருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.