டிசம்பரில் இந்தியா மிகப்பெரும் அழிவை சந்திக்கும் என கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளர் பிரதமர் மோடிக்கு கடிதம்..!

2333

டிசம்பர் 31ம் தேதிக்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இந்தியா வரலாறு காணாத அழிவை சந்திக்கும் என கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ice_screenshot_20170924-110555
கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளரான பாபு கலாயில் என்பவர் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
ice_screenshot_20170924-110625
இதன் தாக்கத்தால் இந்தியா, சீனா, வங்கதேசம், இந்தோனேசியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வலைகுடா நாடுகள் என பல நாடுகள் மிகப்பெரும் அழிவை சந்திக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கடலில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் சுனாமி அலைகளும் ஏற்படும் என தெரிவித்துள்ள அவர், எதற்கும் தயாராக இருக்குமாறு மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த கடிதம் எழுதியுள்ள பாபு கலாயில், 2004 சுனாமி குறித்து 2 வாரங்களுக்கு முன்னரே கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.