ஆந்திராவில் கடனை திருப்பி செலுத்த முடியாததால், மனைவி மற்றும் பிள்ளைகளை விற்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் குர்னூல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடம்மா. அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பசூபத்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அத்தம்பதிகளுக்கு மகன் மற்றும் 3 மகள் உள்ளன. குடிபழக்கத்துக்கு அடிமையான பசூபத்தி, குடும்பத்தினரை சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது மூத்த மகளின் திருமணத்திற்காக ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் கடனான பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்த அவர், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளையும் கடன் வாங்கிய நபரிடம் விற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கடம்மா, இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசூபத்தி யை தேடி வருகின்றனர்.