கேரளாவில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு….

201

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி உள்பட பல்வேறு பகுதிகள் கனமழையால் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கனமழைக்கு இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 11 பேர் பலியாகினர். மாநிலத்தில் உள்ள 24 அணைகளும் நிரம்பியதை அடுத்து, பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். ராணுவப் படை, விமானம் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை எதிரொலியால் கொச்சி விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொத்தமங்கலம், குன்னத்தநாடு, ஆலுவா, கடமாகுடி ஆகிய பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.