தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் மாரடைப்பால் மரணம்…..

182

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நெய்க்குப்பை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் குத்தாலம் ஒன்றிய பிரதிநிதியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த இவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்ட மரணம் அடைந்தார்.இதேபோல் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தவில் கலைஞரான இவர் தி.மு.க.வின் தீவிர தொண்டராக இருந்தார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.இதேபோல் எடப்பாடி அருகே கச்சுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.