மீன்பிடிக்கச் சென்றவர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு..!

253

தூத்துக்குடியில் மீன் பிடிக்கச் சென்ற கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் அந்தோணி கடலில் மீன்பிடிக்கும்போது தவறி விழுந்துவிட்டதாக அவருடன் சென்ற மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோரக் காவல் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே சடலம் ஒன்று ஒதுங்கியிருப்பதாக தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்றனர். இறந்து கிடந்தது அந்தோணிதான் என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர். அந்தோணி சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.