ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

447

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூரின் அருகே கொத்தனூரில் காவிரி ஆறு கரை புரண்டு ஓடுகிறது. இந்த ஆற்று நீரில் குளித்து மகிழ்வதற்காக ஏராளமான பேர் வருகை தருவது வழக்கம். இன்று காலை சரவணன் என்பவரோடு அவரது மனைவி ஜோதிமணி மற்றும் குடும்பத்தார் அனைவரும், காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.கொத்தனூர் காவிரி ஆற்றில் ஆனந்தமாய் குளித்துக்கொண்டிருந்த இவர்கள், ஒரு கட்டத்தில், மிகவும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த அனைவரும் நீச்சல் தெரியாததால், ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கத் தொடங்கினர் . இவர்களில் ஆறு பேர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இறந்தோரில் சரவணன், அவரது மனைவி ஜோதிமணி மற்றும் அவர்களுடன் குளித்த இருவர் என 4 பேரை சடலமாக மீட்டுள்ளனர் . மற்ற உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.