பெண் வழக்கறிஞர் படுகொலையால் பரபரப்பு..!

285

சித்தூரில், பெண் வழக்கறிஞர் படுகொலை செய்யபட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், சித்தூரை அடுத்த மதனப்பள்ளி காலணி பகுதியில் நாகஜோதி என்ற பெண், வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். இதையெடுத்து, சம்பவ இடத்திலையே நாகஜோதி உயிரழந்தார். பட்டபகலிலே நடந்த இச்சம்பவத்தினால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து சித்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.