பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!

218

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்திற்குட்பட்ட முனிவார்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினரும், பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் மொபைல் இண்டெர்னெட் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.